அண்ணா சாலையில் பயங்கர தீவிபத்து: தீயை அணைக்க போராடும் வீரர்கள்!

 
fire

சென்னை அண்ணாசாலையில் சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நான்காவது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தில் மின்கசிவு காரணமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த தீ மூன்றாவது மாடிக்கும், நான்காவது மாடிக்கும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் கடந்த சில மணி நேரங்களாக தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் 

மேலும் சாந்தி தியேட்டர் பகுதியில் உள்ள போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியிடம் இருந்து தண்ணீர் லாரிகள் அதிகமாக வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 

தீயணைப்பு துறையினர் தங்கள் உயிரையே பணயம் வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தற்போது தீ கட்டுக்குள் வந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இனிமேல்தான் சேத மதிப்பீடு மற்றும் தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

From around the web