சென்னையில் 10 ரூபாய் சாப்பாடு: பொதுமக்கள் மகிழ்ச்சி

வெளியூரிலிருந்து வேலை தேடி சென்னை வந்து தங்கி இருக்கும் மக்களுக்கு ஏற்படும் ஒரே முக்கிய பிரச்சனை சாப்பாடு தான். தினமும் சாப்பாடுக்காக 250 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் நிலையில் சென்னை சாலிகிராமத்தில் ரூபாய் பத்துக்கு சாப்பாடு கொடுக்கும் ஓட்டல் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே ரஜினி ரசிகராக இருக்கும் தான் இந்த ஓட்டலை சேவை மனப்பான்மையுடன் ஆரம்பித்துள்ளதாகவும் காலை மற்றும் இரவு வேளைகளில் கிடைக்கும் லாபத்தை வைத்து மதிய
 
சென்னையில் 10 ரூபாய் சாப்பாடு: பொதுமக்கள் மகிழ்ச்சி

வெளியூரிலிருந்து வேலை தேடி சென்னை வந்து தங்கி இருக்கும் மக்களுக்கு ஏற்படும் ஒரே முக்கிய பிரச்சனை சாப்பாடு தான். தினமும் சாப்பாடுக்காக 250 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் நிலையில் சென்னை சாலிகிராமத்தில் ரூபாய் பத்துக்கு சாப்பாடு கொடுக்கும் ஓட்டல் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் இருந்தே ரஜினி ரசிகராக இருக்கும் தான் இந்த ஓட்டலை சேவை மனப்பான்மையுடன் ஆரம்பித்துள்ளதாகவும் காலை மற்றும் இரவு வேளைகளில் கிடைக்கும் லாபத்தை வைத்து மதிய சாப்பாடு ஏற்படும் இழப்பை சரிகட்ட உதவும் என்றும் ‘உழைப்பாளர் உணவகம்’ என்ற இந்த ஓட்டலின் உரிமையாளர் வீரபாகு என்பவர் கூறியுள்ளார்

சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் உடன் சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கும் இந்த உணவை சாப்பிட மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web