மீண்டும் கோயில்கள் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!

 
jambukeshwarar temple

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்றைய தமிழக பாதிப்பு சுமார் 6000 பேர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக அரசின் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து அன்று முதல் கூடுதல் தளர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமாக பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடும் கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு நிலையங்களையும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் வழங்கப்பட உள்ள கூடுதல் தளர்வுகளில் கோயில் திறப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அவர்களும் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் கோவில்கள் வரும் திங்கள் முடஹ்ல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சிறிய வகை கோயில்கள் மட்டுமே திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்கள் கழித்து பெரிய கோயில்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web