கோயில்கள் திறக்கப்பட்டன, பேருந்துகள் இயங்கின: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்!

 
buses

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி இன்று முதல் கோவில்கள் திறக்கப்பட்டன, பேருந்துகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இன்று காலை முதலே தமிழகத்தில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும், வேளாங்கண்ணி சர்ச் உள்பட அனைத்து தேவாலயங்களும், நாகூர் தர்கா உள்பட அனைத்து மதவழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன என்பதும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதேபோல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு வெளியையும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இன்று காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்க தொடங்கி விட்டன என்பதும் 50 சதவீத பயணிகளுடன் இயங்கி வரும் பேருந்துகள் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் இன்று முதல் ஜவுளி கடைகள் நகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட உள்ளன என்பதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது. பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் நீச்சல் குளங்கள் மட்டுமே இன்னும் தமிழகத்தில் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web