நீட் தேர்வை எப்படி ரத்து செய்வது என்ற வழியை சொல்லுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் யோசனையை ஏற்க தயார் என்றும், 8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுகிறீர்கள்? அதை எப்படி நீங்கள் ரத்து செய்வீர்கள் என்ற வழியை சொல்லுங்கள்
 

நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் யோசனையை ஏற்க தயார் என்றும், 8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுகிறீர்கள்? அதை எப்படி நீங்கள் ரத்து செய்வீர்கள் என்ற வழியை சொல்லுங்கள். நாங்கள் அதனை பின்பற்றுகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு நீக்கப்படும் என சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வை நீக்குவது மாநில அரசின் கையில் உள்ளதா? அல்லது சட்டப்போராட்டம் நடத்தி நீக்கப்போகிறதா? என்பது குறித்து இதுவரை திமுகவினர் கூறவில்லை

இந்த நிலையில் எட்டு மாதங்களில் நீட் தேர்வை எப்படி நீக்குவீர்கள், தி.மு.க. அதற்கான வழிகளை கூறினால் இப்போதே தமிழக அரசு செய்ய தயார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை திமுக ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web