ஆசிரியர் தகுதித்தேர்வு வாழ்நாள் முழுவதும் செல்லும்: தமிழக அரசின் அரசாணை

 
tet

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இதுவரை ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

7 ஆண்டுகள் முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் காலாவதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்த அரசாணை வெளியாகியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து ஆசிரியர்களின் ஏற்கனவே தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள் புதிதாக தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web