டீக்கடை, பூக்கடை வச்சிருந்தவங்க எல்லாம் இன்று பெரும் பணக்காரர்கள்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ள நிலையில் நேற்று முதல் நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அவர் சேலம் மற்றும் வேலூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் மதுரைக்கு பிரச்சாரத்துக்கு சென்றபோது கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் சென்றது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகியது. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன் நான் 230 படத்திற்கு மேல் நடித்து சம்பாதித்து உள்ளேன். ஹெலிகாப்டர் என்ன, மக்களை சீக்கிரம் போய் பார்க்க போயிங் விமானத்தில் கூட என்னால் போக முடியும்
ஆனால் டீ கடை வைத்திருந்தவர்கள், பூக்கடை வைத்து இருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரராக இருக்கும் போது என்னை பார்த்து கேள்வி கேட்க எங்கிருந்து துணிவு வந்தது? என்று கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது