வெளிநாட்டு காருக்கு வரி குறித்த வழக்கு: மேல்முறையீடு செய்த விஜய்

 
vijay

நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டுக்கு காருக்கு வரி கட்ட வேண்டும் என்றும், வழக்கு தொடர்ந்ததற்காக ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்க செலுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார் 

இந்த தீர்ப்பு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது

மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி தீர்ப்பில் தன்னைப்பற்றி பதிவு செய்த விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே தனி நீதிபதியின் தீர்ப்பு குறித்து அரசியல்வாதிகள் வழக்கறிஞர்கள் முன்னாள் நீதிபதிகள் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் விஜய் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தால் கண்டிப்பாக அவருக்கு வெற்றி கிடைக்கும் என்று கருத்து தெரிவித்தனர் 

மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என ஏற்கனவே விஜய்யின் வழக்கறிஞர் பேட்டி கொடுத்திருந்த நிலையில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

From around the web