டாஸ்மாக்கிற்கு அனுமதி, டீக்கடைக்கு அனுமதி இல்லையா?

 
tasmac

தமிழகத்தில் ஜூன் 14 முதல் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக சற்றுமுன் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஊரடங்கில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சலூன் கடைகள் அழகு நிலையங்கள் உள்பட பல கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் டீ கடைகள் மட்டும் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்தது, இது டீ பிரியர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது

உடலுக்கு நோயை உண்டாக்கும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கும் தமிழக அரசு உடலுக்கு புத்துணர்ச்சி தரும் டீ கடைகளை திறக்க அனுமதிக்காதது ஏன்? என்ற கேள்வியை டீ பிரியர்கள் கேட்டு வருகின்றனர். ஒரு சில நிபந்தனைகளுடன் டீக்கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கும் போது தமிழக அரசு பரிசீலனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

From around the web