மு க ஸ்டாலின் அணிந்த தமிழ் ஆதரவு வாசக டி-ஷர்ட்: பெரும் பரபரப்பு

 

கடந்த சில நாட்களாக ’தமிழ் தெரியாது போடா’ மற்றும் ‘ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ ஆகிய வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகளை திரையுலக பிரமுகர்கள் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை உடற்பயிற்சி செல்லும்போதும் ’தமிழ் எங்கள் உயிர்’ என்ற வாசகம் கொண்ட டீசர்ட் அணிந்து சென்றார். இந்த இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டீசர்ட்டில் பெரியார் அண்ணா மற்றும் கருணாநிதி உருவ படங்கள் முன்பக்கம் உள்ளன. பின்பக்கத்தில் தமிழகத்தின் வரைபடம் உள்ளது

சைக்கிள் உடற்பயிற்சிக்கு செல்லும்போது முக ஸ்டாலின் அணிந்து சென்ற அந்த டிஷர்ட்டின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் கொண்ட இந்த டீசர்ட்டுக்கலை திமுகவினரும் இனி அணிய தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மொத்தத்தில் தற்போது அரசியலில் தமிழ் கலந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இந்தி எதிர்ப்பு என்னும் அஸ்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் திமுக, வரும் தேர்தலிலும் இந்த அஸ்திரத்தை மீண்டும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web