பிரிகிறதா தமிழ்நாடு: தீவிரமாகும் கொங்குநாடு பிரச்சனை!

 
kongu nadu


தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி மத்திய அரசை வெறுப்பேற்றுகின்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற தனி யூனியன் பிரதேசமாக உருவாக்க மத்திய அரசு திட்டம் உள்ளது 

கோவை சேலம் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்த்து புது மாவட்டமாக உருவாக்க திட்டம் தயாராகி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழகம் பிரிக்கப்படுகிறது என்ற செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழகத்தை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தாலும் பாஜகவினர் கண்டிப்பாக கொங்குநாடு உருவாகும் என்று கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது போல், காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது போல், ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது போல், தமிழகமும் பிரிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From around the web