லீக் ஆன ஆதார்: ரேசன் கார்டில் இருந்து லீக்கா?

 
aadhar

தமிழகத்தைச் சேர்ந்த ரேஷன் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் லீக் ஆனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தமிழகத்தைச் சேர்ந்த 50 லட்சம் ரேஷன் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியிருப்பதாக பெங்களூரை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழக பொது வினியோக திட்ட விபரங்கள் ஹேக்கர்கள் மூலம் இணையத்தில் லீக் ஆகி உள்ளதாகவும் சுமார் 5 லட்சம் பேர்களில் முக்கிய விவரங்கள் வெளியாகி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையத்தில் லீக் ஆன விவரங்களில் ஆதார் எண், குடும்ப விவரங்கள், மொபைல் எண் என பொது மக்களின் முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறத்.

ரேசன் கார்டு பயனர்கள் விவரங்கள் வீக்கான விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. ரேஷன் கார்டு மூலம் ஆதார் விவரங்கள் மற்றும் தனிப்பட்ட குடும்ப விவரங்கள், மொபைல் எண்கள் என அனைத்துமே பொதுவெளியில் லீக்காகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web