கொரோனாவுக்கு தமிழக அமைச்சர் பலி: அதிர்ச்சி தகவல்!

 

கொரோனா வைரஸ்க்கு ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது தமிழக அமைச்சர் ஒருவரும் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக நேற்று இரவு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது

72 வயதான அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் 14ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகி விட்டதாக நேற்று மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 

இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு மரியாதை செய்ய உள்ளதாகவும் அதனை அடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

கொரோனா வைரசுக்கு தமிழக அமைச்சர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web