ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பம்: கல்லூரி மாணவர்கள் உற்சாகம்!

 
ponmudi

ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் ஆன்லைனில் தான் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 

மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 1முதல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் கொரோனா விதி முறைகளை கடைப்பிடித்து மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் மதிப்பெண்கள் வந்துவிடும் என்பதால் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web