கோவின் இணையதளத்தில் தமிழ் இணைப்பு!

 
covin website

தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்யும் கோவின் என்ற இணையதளத்தில் இதுவரை தமிழ் இணைக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது

தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யும் இணையதளம் கோவின் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் சமீபத்தில் குஜராத்தி மராத்தி மலையாளம் உள்பட 10 மொழிகளில் இணைக்கப்பட்டிருந்தது

ஆனால் அதில் தமிழ் இணைக்கப்படாமல் இருந்ததால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ் மொழியும் இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. அந்த வகையில் தற்போது தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி இணைக்கப்பட்டது தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

From around the web