பாஜகவில் இணைந்த தமிழ் நடிகர்: மேலும் நான்கு நடிகர்கள் இணைய உள்ளதாக தகவல்!

 

தமிழக பாஜகவில் தமிழ் நடிகர் ஒருவர் இணைந்து உள்ளதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மேலும் நான்கு நடிகர்களிடையே இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது 

கலகலப்பு, அரண்மனை உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் சுப்பு பஞ்சு என்பது தெரிந்ததே. இவர் சமீப காலமாக பாஜகவில் இணைவார் என்று செய்திகள் வந்த நிலையில் இன்று அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது

subbu panju

இன்று சென்னை வந்த பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி அவர்களின் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் சுப்பு பஞ்சு. அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை குஷ்பு அவருடன் எடுத்துக்கொண்ட செல்பியையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் நடிகர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைந்ததை அடுத்து மேலும் நான்கு நடிகர்கள் பாஜகவில் இணைய தயாராக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்புகள் மற்றும் இணைப்பு விவரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது 

இந்த தகவல் வெளிவந்ததில் இருந்து அந்த நான்கு நடிகர்கள் யார் என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் அந்த நான்கு பேர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web