தாம்பரம் இனி மாநகராட்சி: தமிழக அரசு அறிவிப்பு

 
tambaram

தமிழகத்திலுள்ள தாம்பரம் இதுவரை நகராட்சியாக இருந்த நிலையில் மாநகராட்சியாக மாறியது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மேலும் 6 புதிய மாநகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் அடங்கிய தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக விரைவில் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

இதேபோல் திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகள் செங்கல்பட்டு, பூந்தமல்லி, மன்னார்குடி, ஆகிய நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

From around the web