தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில்கள் இன்று ரத்து!

 
train

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை கோட்ட ரயில்வே துறை தெரிவித்துள்ளது

சென்னை எழும்பூர் விழுப்புரம் இடையிலான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்காரணமாக இன்று சென்னை தாம்பரம் - கடற்கரை உள்பட ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

* சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் செல்லும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில்கள் இன்று காலை 10 மணிமுதல் 2 மணிவரை பகுதியாக ரத்து 

* கும்மிடிப்பூண்டி - செங்கல்பட்டு இடையே காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து 

* கடற்கரையில் இருந்து காலை 9.32, காலை 10.10, காலை 10.56, முற்பகல் 11.50, மதியம் 12.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து 

* செங்கல்பட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.40, முற்பகல் 11.00, 11.30, மதியம் 12.20, 1.00 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில்கள், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே பகுதியாக ரத்து 

* காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை (வண்டி எண்: 40704) இடையே காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து 

* திருமால்பூர் - சென்னை கடற்கரை (வண்டி எண்: 40804) இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து 

ஆனால் அதே நேரத்தில் காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே மதியம் 12 மணி, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும் 2 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

இவ்வாறு சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web