#Breaking அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளைப் பெற்றது தமாகா!

அதிமுக - தமாகா இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜி.கே. வாசனின் தமாகாவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பாக தமாகா தரப்பில் 12 தொகுதிகள் வரை கேட்கப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் தர முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன தொகுதிகள் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, என்னென்ன தொகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web