சூர்யா திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான்!  சீமான்

 

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நடிகரின் ஒரே ஒரு அறிக்கைக்கு ஐகோர்ட் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அனைத்து கட்சி அரசியல்வாதிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு கருத்துக்கள் பகிரப்பட்டது

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சூர்யா திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான் என்று புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 

நீட்' தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத்தம்பி சூர்யா அவர்களது கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். அவருக்கு என்னுடைய  வாழ்த்துகளும், பாராட்டுகளும்! அவர் திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான்

From around the web