சென்னையில் திடீர் மழை: சாலைகளில் மழைநீர்!

 
rain

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளதை அடுத்து சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதியில் இருப்பதாக கூறப்படுகிறது 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்பத்தூர், வில்லிவாக்கம், காட்பாடி, அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வடபழனி, அசோக் பில்லர், கிண்டி, திநகர், எழும்பூர், ராயபுரம், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையாக செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே சென்னையில் இன்று நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியதை அடுத்து தற்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web