ரேசன் கடையில் பொருட்கள் வாங்குவதில் திடீர் சிக்கல்!

 
ration

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பலரும் சிக்கலில் தவித்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரேஷன் கடைகள் கடந்த சில மாதங்களாக பயோமெட்ரிக் முறையில் அனைத்து அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைதாரர்கள் ரேகை பதிவு செய்யப்படும் என்பதும் அந்த கைரேகை ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டையில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் பலரது கைரேகைகள் ஆதார் அட்டையில் உள்ள கைரேகையுடன் ஒத்து போகவில்லை என பயோமெட்ரிக் மிஷின் காட்டுகிறது. இதன் காரணமாக பலர் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை அடுத்து கைரேகையை மாற்றுவதற்காக தாலுகா அலுவலகத்தில் பலர் சென்று வருவதாகவும் கைரேகை அப்டேட் செய்ய ஒரு வாரம் வரை ஆகும் காலத்தில் பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து நவீன பயோமெட்ரிக் மிஷின் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

From around the web