மதுரை, திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் திடீர் மாற்றம்!

 
மதுரை, திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் திடீர் மாற்றம்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறார். குறிப்பாக தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமித்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மதுரை, திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்களை தமிழக அரசு அதிரடியாக இடம் மாற்றம் செய்து உள்ளது. இதற்கு பதிலாக புதிய கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு:

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு பதிலாக அனீஷ் சேகர் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு பதிலாக கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரிக்கு பதிலாக பாலசுப்ரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு பதிலாக சிவராசு நியமனம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவுக்கு பதிலாக திவ்யதர்ஷினி நியமனம்

collectors

From around the web