திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து: திமுக தலைவர் ஸ்டாலின்

 

திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவேற்பதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போது ஒவ்வொரு கட்சியினரும் பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக வாக்களிக்க இருக்கும் மாணவர்களின் வாக்குகளை கவர்வதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்

stalin

மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுத்த வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் ரிசர்வ் வங்கியின் அனுமதியால் அளிக்கப்பட்ட கல்விக்கடனை ஒரு மாநில அரசு எப்படி ரத்து செய்ய முடியும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 

இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவில் மத்திய அரசே தலையிட முடியாத நிலையில் ஒரு மாநில அரசு தலையிட்டு கல்விக் கடனை ரத்து செய்யும் என்று அறிவிப்பது சரியானதா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்

மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே செலுத்துவதற்கு வேண்டுமானால் சாத்தியம் இருக்கின்றதே தவிர கல்விக் கடனை ரத்து செய்ய மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

From around the web