மாணவர் சேர்க்கை தொடக்கம்: இணையதள முகவரி அறிவிப்பு!

 
education

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 446 பள்ளிகளில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது 

தனியார் பள்ளிகளில் 25 சதவீதமான 1.20 லட்சம் இடங்களில் சேர ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

From around the web