திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள்: இன்னும் சில நிமிடங்கள் அறிவிக்க வாய்ப்பு

 
திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள்: இன்னும் சில நிமிடங்கள் அறிவிக்க வாய்ப்பு

தமிழகத்தில் தினமும் 14 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது 

நேற்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் பிரதமருடனான ஆலோசனைக்குப் பின்னர் முதல்வரை சந்தித்து பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை செய்துள்ளார். இதன்படி திரையரங்குகள் மூடுதல், மளிகை காய்கறி கடைகளை திறப்பதன் நேரத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

corona

மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், 50% பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய உத்தரவிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் முழு ஊரடங்கு இருந்தது போல் கிட்டத்தட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும்கூறப்படுவதால் பொது மக்கள் குறிப்பாக ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இன்று மாலை வெளியாகும் அறிவிப்பில் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web