தேர்தலுக்கு பின் சென்னையில் கடுமையான கட்டுப்பாடு: மாநகராட்சி ஆணையர் தகவல்!

 

தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு கடுமையாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழ்நாட்டில் நேற்று கிட்டத்தட்ட 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும், அதில் ஆயிரம் பேருக்கு மேல் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் என்பவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தேர்தலுக்கு பின் சென்னையில் கடுமையாக கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் அந்த அசெளகரியத்தை தாங்கிக்கொள்ள மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

chennai

இரவு நேர ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் அவதிப்பட்ட சென்னை மக்கள் தற்போது தான் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் அதிர்ச்சியில் உள்ளனர்

From around the web