திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஸ்டெர்லைட் மூடப்படும்: ஸ்டாலின்

 
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஸ்டெர்லைட் மூடப்படும்: ஸ்டாலின்

மருத்துவத்திற்கு பயன்படும் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் ஆனாலும் ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சி அமைந்தவுடன் மூடப்படும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனுக்காக திறக்க அனுமதிக்கலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு குழு அமைத்து ஆக்ஸிஜன் தவிர வேறு எந்த பணியும் ஸ்டெர்லைட் செய்யக்கூடாது என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது

sterlte

இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியபோது ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்த சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்

இன்று ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி என்று அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ள திமுக, ஆட்சி அமைந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று அறிவித்துள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது

From around the web