இன்று முதல் 2வது தவணை உள்பட ஒருசில திட்டங்கள் தொடக்கம்!

 
ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை: ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்காக ரூபாய் 2000 முதல் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 இன்று முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான டோக்கன்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்பதும் இரண்டாவது தவணை ரூபாய் 2000 வழங்குவதை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ரூபாய் 2000 இரண்டாவது தவணை வழங்குவது மட்டுமின்றி 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மேலும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஆலயங்களில் பணி செய்பவர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web