3 நாள் ஊரடங்கு குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்

சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம் என பேசினார். ஆனால் அதற்கடுத்த நாட்களில்தான் கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகமானது. இந்த நிலையில் 5 மாநகராட்சிகளில் கடுமையான ஊரடங்கு வரும் 26 வரை கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு’ நடைமுறைக்கு வருவதால், ஏப்ரல் 25 – ஒருநாள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தை மாலை வரை நீட்டிப்பு செய்தால், பொதுமக்கள் கூட்டம் கூடாமல்
 

சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம் என பேசினார். ஆனால் அதற்கடுத்த நாட்களில்தான் கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகமானது. இந்த நிலையில் 5 மாநகராட்சிகளில் கடுமையான ஊரடங்கு வரும் 26 வரை கடைபிடிக்கப்படுகிறது.

3 நாள் ஊரடங்கு குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்

முழு ஊரடங்கு’ நடைமுறைக்கு வருவதால், ஏப்ரல் 25 – ஒருநாள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தை மாலை வரை நீட்டிப்பு செய்தால், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

பேரிடர் காலத்திலும்கூட, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதிகார பாணியில், எந்த ஆலோசனையையும் பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்துடன் “மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்”என்று ஒரு வாரத்திற்கு முன் சொன்ன ‘டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி, தற்போது  நான்கு நாட்கள் ஊரடங்கு என்பது அவரது முன்யோசனையின்மையைத்தான் காட்டுகிறது

அதனால், மக்கள் பதற்றமடைந்து, தேவையான பொருள்கள் கிடைக்குமோ தீர்ந்துவிடுமோ என்ற கவலையில், நேற்று காலையிலேயே கடைகள் முன்பாகக் குவிந்துவிட்டனர். காய்கறி – மளிகைப் பொருட்கள் – பால் விற்பனையகம் – இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை உள்ள பகுதிகள் அனைத்திலும் பெருங்கூட்டம் கூடியதால், இந்த ஊரடங்கின் நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகும் சூழல் உருவாகிவிட்டது.

நிலைமை கைமீறிப் போனதற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையரிடமிருந்து, மதியம் 3 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என அறிக்கை வெளியாகிறது. அதற்குள் சென்னையில் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிடவே, மக்கள் இங்குமங்குமாக ஓடி அலைந்து, எங்கேயாவது காய்கறி – மளிகைப்பொருட்கள் கிடைக்கிறதா என அல்லலுற வேண்டியதாயிற்று. “ஹாட் ஸ்பாட்” எனச் சொல்லப்படுகிற நோய்த்தொற்று மிகுந்த சென்னையின் பல பகுதிகளிலும் ஒரே மாதிரியான நிலைமைதான்.

மதுரை, கோவை, தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதே பதற்றம்தான், ஓட்டமும் நடையும்தான், உரசல்தான், மிரட்சிதான்! காட்சி ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மக்கள் கூட்டம் தொடர்பான படங்களும் செய்திகளும் வெளியான பிறகு, முழு ஊரடங்கு நாட்களிலும் காய்கறிக் கடைகள் – பால் விற்பனையகங்கள் திறந்திருக்கும் என அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

4 நாட்கள் முழு ஊரடங்கு என அறிவிப்பதற்கு முன்பே, இதுகுறித்தெல்லாம் முறையாக ஆலோசித்து முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்திருந்தால், மக்களும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பதற்றமின்றி, வழக்கம்போல, சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எவ்வித நெரிசலுமின்றி, பொறுமையாக வாங்கிச் சென்றிருக்க முடியும்.

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியம் அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும். விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை இப்போதாவது நிறுத்திக் கொண்டு, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்படுமாறு அன்புடன் வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்

From around the web