ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பில் உயிரிழப்பு

 
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பில் உயிரிழப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களும், ஒரு சில மாநில முதல்வர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட மாதவராவ் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 

madhavarao

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மாதவராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

உண்மையான கலப்படமில்லாத காங்கிரஸ்காரர் என மாதவராவ் அவர்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தேர்தல் ஆணையத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

From around the web