அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ்: தமிழக அரசு அதிரடி திட்டம்!

 
english

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் அரைமணிநேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பள்ளி முடிந்தவுடன் அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தப்படும் என்றும் அதன் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவு வளரும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி மாணவர்கள் சர்வசாதாரணமாக ஆங்கிலம் பேசும் நிலையில் அவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உயர்ந்த எண்ணம் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web