மளிகை பொருட்கள் வாங்க பிரத்யேக இணையதளம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 
grocery

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்குவதற்கான இணையதளத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள லோக்கல் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் மளிகை கடைகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி எண்களை அந்தந்த பகுதியில் உள்ள சென்னை மக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை மொபைல் போன் மூலம் செய்தால் சில மணி நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுமுதல் மளிகை பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து இந்த இணையதளம் தற்போது வெளியிடப்பட்ட உள்ளது என்பதும் இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த இணையதளத்தில் சென்னையில் உள்ள தங்களுடைய பகுதிகளை தேர்வு செய்தால் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளின் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளின் மொபைல் எண்கள் தெரியும் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டால் தேவையான மளிகை பொருட்கள் கிடைக்கும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள இணையதள முகவரி இதுதான்: http://covid19.chennaicorporation.gov.in/covid/home/ 

From around the web