சென்னை மெட்ரோ ரயிலில் சிறப்பு சலுகை: பயணிகள் மகிழ்ச்சி

 
சென்னை மெட்ரோ ரயிலில் சிறப்பு சலுகை: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை மக்கள் டிராபிக் பிரச்சனை இன்றி தாங்கள் செல்லும் இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல உதவுவது மெட்ரோ ரயில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ மற்றும் கேப்களில் சென்றால் கூட இவ்வளவு குறைந்த கட்டணத்தில் விரைவில் செல்ல முடியாது என்பதால் மெட்ரோ ரயிலை சென்னை மக்கள் அதிக அளவில் தற்போது பயன்படுத்த தொடங்கிவிட்டனர் 

அதுமட்டுமின்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அவ்வப்போது சலுகைகளை அறிவித்து பயணிகளை அசத்தி வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும், 50 சதவீத கட்டணம் சலுகையும், சில சமயம் இலவச கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் தற்போது இன்றும் நாளையும் அரசு விடுமுறை என்பதால் 50% சலுகை கட்டணத்தை மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சலுகையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலை சரியான அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்

From around the web