பள்ளிகளில் பாலியல் புகார் குறித்து விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அறிவிப்பு

 
anbil


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் புகார்கள் குறித்து விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் 

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார் 

anbil

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது என்றும் அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்

மேலும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அறிக்கை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web