தொடங்கியது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்!

 
rain

தென்மேற்கு பருவமழை ஜூன் மூன்றாம் தேதி தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

இதனை அடுத்து தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் படிப்படியாக தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் ஜூலை மாதத்தில் நாட்டின் கடைக்கோடி பகுதியிலும் கூட இந்த மழையின் தாக்கம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வழக்கத்தை விட இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 120 சென்டி மீட்டர் மழையும் குறைந்தபட்சமாக 81 சென்டி மீட்டர் மழையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை குறித்த செய்திகளை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web