ரஜினியை விமர்சனம் செய்ததற்கு வருந்துகிறேன், இனி அவரை கொண்டாடுவோம்: சீமான்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி களத்தில் இறங்கப் போவதாக அறிவித்த உடன் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ, அதே அளவுக்கு எதிர்ப்புகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்தை தமிழர் ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதல் கூறிவரும் நாம் தமிழர் கட்சியின் சீமான், ரஜினியின் அரசியலை கடுமையாக எதிர்த்து வந்தார். ரஜினி குறித்து தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்றும், சிறுவயதிலிருந்தே தான் ரஜினியின் வெறித்தனமான ரசிகர் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வருவதை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் தமிழனை ஒரு தமிழனே ஆட்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்

seeman

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்றும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்தார். இதனை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியபோது ’அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை கடுமையாகப் பேசி இருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்றும், இனி நாம் தமிழர் பிள்ளைகளும் ரஜினியை கொண்டாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தற்போது தனது முக்கிய எதிரி திமுகதான் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web