முக ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் புகுந்த பாம்பு: பெண்கள் அச்சம்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் திடீரென பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட அவளிவநல்லூர் என்ற பகுதியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பெண்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது
கிராமசபை கூட்டத்தில் பாம்பு புகுந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் கூட்டத்தில் ஓணான் புகுந்து விட்டது என்று முக ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் கூட்டத்தில் புகுந்தது ஒரு விஷமற்ற தண்ணீர் பாம்பு என்றும் அதனை அங்கிருந்தவர்கள் அடித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
கிராமசபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென பாம்பு புகுந்ததால் அங்கிருந்த பெண்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர். இதனை அடுத்து பாம்பு அகற்றிய உடன் கூட்டம் மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் பாம்பை வேலுமணி தான் அனுப்பி வைத்தாரா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்