வீட்டில் பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மாணவிகள் எடுத்த விபரீத முடிவு- இப்படியும் நடக்குமா

சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. சென்னையின் கண்ணகி நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் 3 பேர், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் வீட்டில் பெற்றோரை அழைத்து வந்தால்தான் பள்ளிக்கு வர வேண்டும் என கூற பள்ளிக்கு போனால் அடிப்பார்கள் வீட்டிலும் அழைத்து செல்ல முடியாது என பயந்து போன மாணவிகள் பள்ளி செல்வது போல் கிளம்பி, பள்ளிக்கு சென்றால் பெற்றோரை கேட்பார்களே என பயந்து அப்பகுதிகளில் திரிந்துள்ளனர். இதை நோட்டமிட்ட
 

சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. சென்னையின் கண்ணகி நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் 3 பேர், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் வீட்டில் பெற்றோரை அழைத்து வந்தால்தான் பள்ளிக்கு வர வேண்டும் என கூற பள்ளிக்கு போனால் அடிப்பார்கள் வீட்டிலும் அழைத்து செல்ல முடியாது என பயந்து போன மாணவிகள் பள்ளி செல்வது போல் கிளம்பி, பள்ளிக்கு சென்றால் பெற்றோரை கேட்பார்களே என பயந்து அப்பகுதிகளில் திரிந்துள்ளனர்.

வீட்டில் பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மாணவிகள் எடுத்த விபரீத முடிவு- இப்படியும் நடக்குமா

இதை நோட்டமிட்ட ஆட்டோ டிரைவர்கள் இருவர் அந்த மாணவிகளிடம் பேச்சு கொடுத்து கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் இப்படி அழைத்து சென்று அங்கு விளையாட விட்டுள்ளனர்.

தொடர்ந்து இப்படி செய்வது மாணவிகளுக்கு பயத்தை அதிகரித்துள்ளது இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ டிரைவர்கள் அந்த மாணவிகளை வெளியூர் கடத்தி சென்றுள்ளனர்.

பிள்ளைகளை காணாமல் பெற்றோர் கொடுத்த புகாரால் விசாரித்த போலீஸ் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது கனகராஜ் மற்றும் விஜயக்குமார் என்ற ஆட்டோ டிரைவர்களுடன் செல்வது தெரிய வந்தது.

இறுதியில் அவர்களின் செல்ஃபோன் சிக்னலை வைத்து கண்டுபிடித்ததில் அவர்கள் கும்பகோணத்தில் அந்த மாணவிகளுக்கு கோவிலில் வைத்து தாலி கட்டி திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை பொறி வைத்து பிடித்துள்ளது போலீஸ்.

இதில் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கனகராஜ் ஏற்கனவே திருமணமானவன், 19 வயதான விஜயக்குமார் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவன். மாணவிகள் இருவரிடம் திருமண ஆசை காட்டிய அவர்கள், அவர்களை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

எப்படி செல்கிறது பாருங்கள் உலகம்.

From around the web