செப்டம்பர் 17 சமூகநீதி நாள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 
periyar

செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த செய்த முக்கியமானவர்களில் ஒருவர் தந்தை பெரியார் என்பதும் அவருடைய கொள்கைகளை திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் பின்பற்றி வருகின்றன என்பதும் தெரிந்ததே

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் என கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 

பொது மக்களின் விழிப்புணர்வுக்காக பல்வேறு வகையில் பாடுபட்ட பெரியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக உள்பட அனைத்து கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆன்மீகவாதியாக முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

From around the web