12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே ஆனால் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு ஏற்கனவே தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் உள்ளது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வெளி வந்தால் தான் அந்த மாணவர்கள் அடுத்ததாக கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்
 

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே

ஆனால் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு ஏற்கனவே தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் உள்ளது

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வெளி வந்தால் தான் அந்த மாணவர்கள் அடுத்ததாக கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வரிடம் இது குறித்து ஆலோசனை செய்த பிறகே 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்று கூறியுள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web