செமஸ்டர் மறு தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு!

 
anna university

கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது 

இதனையடுத்து அந்த செமஸ்டர் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மறு தேர்வுக்கான விண்ணப்பம் வரும் 24ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 

ஏற்கனவே செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் புதிதாக செமஸ்டர் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

மேலும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web