சீமானை அடுத்து முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயாராகும் நடிகை!

 

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான முக ஸ்டாலின் வெற்றி பெற கூடாது என கங்கனம் கட்டிக்கொண்டு ஒரு சிலர் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், முக ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அந்த தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவரும் முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஸ்டாலின் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்

kushboo

மேலும் முக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியின் தான் அவரை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் சீமான், முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியுள்ள நிலையில் தற்போது குஷ்புவும் அதே தொகுதியில் போட்டியிட தயார் என அறிவித்துள்ளதால் ஸ்டாலினின் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது 

திமுகவில் இருக்கும் போது திமுக தொண்டர்களால் தாக்கப்பட்டபோது தன்னை ஸ்டாலின் காப்பாற்றவில்லை இந்தியை தாய்மொழியாக கொண்ட நானே தமிழில் நானே துண்டு சீட்டு இல்லாமல் பேசும் போது முக ஸ்டாலின் துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு தான் பேசுவார் என்றும் குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். இதனை அடுத்து திமுக தொண்டர்கள் குஷ்பு மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

From around the web