பள்ளிகள் திறக்கப்படாது: புதுவை அரசு திடீர் அறிவிப்பு!

 
school

புதுவையில் ஜூலை 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது நாளை பள்ளிகள் திறக்கப்படாது என்றும், பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது 

தமிழகம் புதுவை உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் ஜூலை 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றும் பள்ளிகள் திறப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகபி,. புதுவை மாநில கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார் 

கொரோனா வைரஸ் முழுமையாக குறையாததால் பள்ளி கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பதாகவும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web