ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஆலோசனை

 
school

கடந்த மாதம் உச்சத்திலிருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து விட்டது என்பதும் கட்டுக்குள் வந்துவிட்டது என்பதும் தெரிந்ததே. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக பள்ளிகள் கல்லூரிகளை திறப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்த ஆலோசனையில் நல்ல முடிவு எட்டப்பட்டால் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் உயர்கல்வி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web