பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 
school

பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அந்தவகையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
மேலும் பள்ளிகள் திறப்பதற்கு முன்னால் பெற்றோர்களிடம் கருத்துகணிப்பு கேட்கப்படும் என்றும் அந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தான் தமிழக அரசு பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

From around the web