ஏப்ரல் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

 

ஏப்ரல் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது

கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு பின் கடந்த ஜனவரி மாதம் முதல் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின. இருப்பினும் பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து என்றும் மாணவர்கள் அனைவரும் பாஸ் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது

school

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு மற்றும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை இது குறித்து விளக்கமளிக்கையில் ’ஏப்ரல் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற செய்தியில் உண்மை இல்லை என்றும் அவ்வாறு எந்த திட்டமும் பள்ளிக்கல்வித்துறையிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நாளன்று ஒரு சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்றும் மற்றபடி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web