பள்ளி ஆசிரியர் கைது: மாணவி பாலியல் புகார் எதிரொலி!

 
anandan arrest

மாணவியின் பாலியல் புகார் காரணமாக ஏற்கனவே பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இன்னொரு மாணவியின் பாலியல் புகார் காரணமாக மற்றொரு ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் என்பவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் புகார் செய்திருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர் 

இந்த நிலையில் தற்போது மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் உள்பட ஒருசிலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

From around the web