பள்ளி திறக்கும் தேதி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

 
school

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகள் மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பலியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது என்பதும் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது என்பதும் பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் பார்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் விரைவில் திறக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ’மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

From around the web