தமிழகம் வந்ததும் அதிமுகவை சசிகலா கைப்பற்றுவார்: நமது எம்.ஜி.ஆர் நாளேடு 

 

சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா, தமிழகம் வந்த பிறகு அதிமுகவை கைப்பற்றுவார் என அதிமுகவின் நாடான நமது அம்மா திட்டவட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேலும் அந்த நாளேட்டில், ‘சசிகலாவை ஒன்று கூடி வரவேற்போம் என்றும், விரைவில் முடிவெடுங்கள் என்றும் அதிமுக அமமுக இணைப்பிற்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது. சசிகலா தமிழகம் வந்ததும் அதிமுகவை மீட்டெடுப்போம் என்றும், சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப்படுவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் நாளேட்டில் பதிவு செய்து தெரிவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

jayakumar

அமமுக மற்றும் அதிமுக இணைப்பிற்கு நமது எம்ஜிஆர் அழைப்பு விடுத்த நிலையில் இந்த இணைப்பு சாத்தியமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டுமென ஓபிஎஸ் மகன் பிரதீப் வாழ்த்து சொல்லியிருப்பது மனிதாபிமான அடிப்படையில்தான் என்றும் அதனால் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

சசிகலாவையும் அமமுகவையும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் இதனை ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெளிவுபடுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

From around the web